×

20 கிலோ ‘தொட்டி பூட்டு’ திண்டுக்கல்லில் தயாரிப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தயாரிக்கும் பூட்டுகள் திருடர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவதால் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் திண்டுக்கல் பூட்டுக்கு அதிக கிராக்கி உண்டு. திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் மூன்று தலைமுறையாக பூட்டு தயாரிப்பு தொழில் செய்து வரும் முருகன், சேகர், சந்தோஷ் ஆகியோர் சார்பில், ராமநாதபுரம் மாவட்டம், லாந்தை, ஸ்ரீசந்தவழியான் முனியப்ப சாமி கோயிலுக்கு திண்டுக்கல்லில் இருந்து 20 கிலோ எடையுள்ள மெகா சைஸ் பித்தளை தொட்டி பூட்டு தயாரித்து அனுப்பப்பட்டது. இந்த பூட்டு 10 லீவர்களை கொண்டது. இந்த பூட்டின் சாவியை தவிர மற்ற எந்த சாவியை கொண்டும் பூட்டை திறக்க முடியாது.

இந்த பூட்டு 15 இஞ்ச் நீளம், 10 இஞ்ச் அகலமும், 17 கிலோ எடையும் கொண்டது. சாவி 13 இஞ்ச், ஒன்றரை கிலோ எடை கொண்டதாகும். (பூட்டு ஒன்று 17 கிலோ, இரண்டு சாவி 3 கிலோ என மொத்தம் 20 கிலோ). இந்த பூட்டு இயந்திரங்கள் இல்லாமலே கைகளால் மட்டுமே 20 நாட்களில் தயார் செய்யப்பட்டுள்ளது. பூட்டு நிறுவனத்தினர் கூறுகையில், ‘‘கோயிலுக்கு என்றால் திண்டுக்கல்லில் குறைவான விலையில் பூட்டு தயார் செய்வர். அந்த வகையில் இந்த பூட்டு ரூ.35 ஆயிரத்திற்கு கோயிலுக்கு விற்பனை செய்யப்பட்டது. வெளிமார்க்கெட்டில் இந்த பூட்டின் விலை ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது’’ என்றனர்.

The post 20 கிலோ ‘தொட்டி பூட்டு’ திண்டுக்கல்லில் தயாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Dinakaran ,
× RELATED திண்டுக்கல் மாவட்டத்தில் போதிய...